புதுச்சேரி : புதுச்சேரியில் அஜித் ரசிகர் ஒருவர், ‘ஏ.கே.61 அப்டேட்’ கேட்டு தனது கையை பிளேடாக கீறிக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நடிகர் அஜித் நடிப்பில் ‘வலிமை என்ற படம் வெளியாகி இருந்தது. தற்போது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அவர் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு தலைப்பு வைக்காத நிலையில், ‘ஏகே61’ என்ற பெயரில் ஷூட்டிங் நடந்து வந்தது. பின்னர் இப்படத்திற்கு ‘துணிவு’ என தலைப்பு வைத்தனர். இந்தப் படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
புதுச்சேரியில் உள்ள அஜித் ரசிகர்கள், பிரெஞ்சு சிட்டி அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சமூக வலைதள குழு ஏற்படுத்தி, ‘துணிவு’ படத்தின் தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.
பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பிறகு துணிவு படத்தின் ‘அப்டேட்’ செய்தி ஏதும் வரவில்லை. இந்ந நிலையில், சமூக வலைதள குழுவில் உள்ள புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் பிளேடால் தனது கையில் ஏ.கே.61 அப்டேட் என கீறிக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகரின் இந்த செயலுக்கு எதிர்ப்பும், ஆதரவும் குவிந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement