கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்து: இறப்பதற்கு முன் மனைவியிடம் கடைசியாக போனில் பேசிய விமானி


செவ்வாய்கிழமை (அக்டோபர் 18) குகைக்கோவிலில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் மலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிகத்தை சேர்ந்த 3 பேரும் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான விமானி, விபத்துக்கு முன் கடைசியாக தனது மனைவிக்கு போன் செய்து பேசிய உருக்கமாக பேசியுள்ளார்.

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில், செவ்வாய்கிழமையன்று குகைக்கோவிலில் இருந்து 6 பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள Garud Chatti என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.

மோசமான வானிலை காரணமாக அருகில் இருந்த மலையில் மோதி ஹெலிகாப்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், பயணிகள் 6 பேர் மற்றும் விமானி ஆகிய ஏழு பேரும் உயிரிழந்தனர்.

கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்து: இறப்பதற்கு முன் மனைவியிடம் கடைசியாக போனில் பேசிய விமானி | Kedarnath Helicopter Crash Last Phone Call Wife

விபத்து நடந்து 2 நாட்கள் ஆன நிலையில், இப்போது ஹெலிகாப்டரை இயக்கிய விமானி, விபத்துக்கு முன்பு தனது மனைவிக்கு போன் பேசியது தெரியவந்துள்ளது.

அதாவது விபத்து நடந்த தினத்திற்கு முந்தைய நாள் (திங்கட்கிழமை) தனது மனைவிக்கு போன் செய்திருக்கிறார் விமானி அனில் சிங். அப்போது, “மகளை பார்த்துக்கொள். அவளுக்கு உடல்நிலை சரியில்லை” என மனைவியிடம் உருக்கமாக பேசியுள்ளார்.

57 வயதான விமானி அனில் சிங் தனது மனைவி ஷிரீன் ஆனந்திதா மற்றும் மகள் ஃபிரோசா சிங் ஆகியோருடன் அந்தேரி பகுதியில் வசித்து வந்தார்.

இதுகுறித்து பேசிய அவரது மனைவி ஷிரீன் ஆனந்திதா,”நாங்கள் எனது கணவரின் இறுதிச் சடங்குகளை செய்ய டெல்லிக்கு செல்ல இருக்கிறோம். எங்களுக்கு கடந்த திங்கட்கிழமை அவர் போன் செய்தார். அப்போது மகளை பார்த்துக்கொள்ளும்படியும் அவளுக்கு உடல்நிலை சரியில்லை எனவும் அவர் கூறினார். அடுத்தநாள் இந்த துயர சம்பவம் நடந்தது” என கவலையுடன் தெரிவித்தார்.

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிகத்தை சேர்ந்த 3 பேரும் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உடல்களை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.