வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: கடந்த 16 ம் தேதி ,சீன அதிபராக ஷி ஜின்பிங்கிற்கு எதிராகவும், அவரை பதவியில் இருந்து நீக்கும்படி பீஜிங்கில் உள்ள பாலம் ஒன்றில் பேனர் கட்டி சிலர் போராட்டம் நடத்தி உள்ளனர்.
கோவிட் காரணமாக அங்கு அமல்படுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜின்பிங்கிற்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டதாக தெரிகிறது. மேம்பாலத்தில் ஒட்டப்பட்ட பேனரில், ‘ வேலை நிறுத்தத்தில் ஈடுபடுங்கள்! சர்வாதிகாரியும் தேசத் துரோகியுமான ஜி ஜின்பிங்கை அகற்றுங்கள் ‘ என எழுதப்பட்டிருந்தது.
சீனாவில் சர்வாதிகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜனநாயகம் வேண்டும் என போராடுபவர்கள் சிலர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஷென்ஜென், ஷாங்காய், பெய்ஜிங், குவாங்சு மற்றும் ஹாங்காங் உள்ளட்ட 8 நகரங்களில் ஷி ஜின்பிங்கை அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என போராட்டம் நடத்தியதாக தெரிவித்துள்ளனர். பல இடங்களில் இருந்தும் ஜின்பிங்கிற்கு எதிராக போராட்டம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சீனாவில் பொது இடங்களில் ரேடார் மூலம் பொது மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படுவதால், கழிப்பறைகள் மற்றும் பள்ளிகளின் நோட்டீஸ் போர்டில் ஜின்பிங்கிற்கு எதிரான வாசகம் அடங்கிய பதாகைகள் ஒட்டப்பட்டுகின்றன அல்லது எழுதப்படுகிறது.
போராட்டக்காரர்களின் முக்கிய இடமாக கழிப்பறைகள் மாறியுள்ளன. அங்கு, சர்வாதிகாரத்தை நிராகரிப்போம்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அமெரிக்கா. ஜப்பான், தென் கொரியா, தைவான் பல்கலைகழகங்களில் ஜின்பிங்கிற்கு எதிராக போராட்டம் நடந்துள்ளது.

பெய்ஜிங் பாலத்தில் ஜின்பிங்கிற்கு எதிராக போஸ்டர் ஒட்டியவரை பாராட்டி, அமெரிக்காவில் மெயின் என்ற இடத்தில் உள்ள கல்லூரியை சேர்ந்த சீனர் ஒருவர் கூறுகையில், நாங்கள் சீனர்கள். மனதில் உள்ள செய்தியை தடை இல்லாமல் பரப்ப விரும்புகிறோம் எனக்கூறினார்.
சிறை வாசம்
சீனாவில் பொது இடங்களில் ஷி ஜின்பிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும். அங்கு பாலத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தாலும், அதில் உள்ள வார்த்தைகளை சீனாவில் இணையதளத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘பெய்ஜிங் போராட்டக்காரர்கள்’, ‘ ‘சிடோங் பிரிட்ஜ் ‘ போன்ற வார்த்தைகள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், ‘பாலம்’, ‘ தைரியம்’, ‘ஹீரோ’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement