சீமான் மீது காவல்துறையில் புகார்: சாதி ரீதியாக இழிவாக பேசினாரா?

யாதவ சமுதாயத்தினரை இழிவு படுத்தும் வகையில் பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்

மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க கோரி யாதவ அமைப்புகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்தனர்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் காசிராஜன், “உத்திரபிரதேசத்தில் கடந்த வாரம் முலாயம் சிங் யாதவ் உயிரிழந்த நிலையில் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இரங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனை கொச்சைப்படுத்தும் வகையில் கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் பேசினார். தமிழகத்தில் இருக்கக்கூடிய கோனார், இடையர் உள்ளிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தக்கூடிய வகையிலும், முலாயம் சிங் யாதவ் உயிரிழப்புக்கு தமிழகத்தைச் சேர்ந்த கோனார், இடையர்கள் உள்ளிட்டவர் எதற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என பேசியும் பல்வேறு இழிவான கருத்துக்களை தெரிவித்தார். எனவே அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.