மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விஷயம் தான் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஜெயலலிதா பேசிய ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஏற்கனவே வைரலாகி பல்வேறு சந்தேகங்களை, சர்ச்சைகளை கிளப்பிய ஆடியோ தான் என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் மீண்டும் வைரலாவதால் அதிமுகவினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், ”கேக்குதா… (இருமுல் சத்தம்) அப்ப இருந்தப்போது கூப்டேன்… அப்ப அதை எடுக்க முடியலனீங்க… எல்லாம் ஒன்னு கிடக்க ஒன்னு… நீங்களும் சரி… எடுக்க முடியலனா விடுங்க… (தொடர் இருமல் சத்தம்) எல்லாம் வருது… உய்யு உய்யுனு…” என ஜெயலலிதா பேசுகிறார். இதற்கிடையில் மருத்துவர் சிவக்குமார் பதிலளித்து வருகிறார். எப்படியிருந்த அரசியல் ஆளுமையின் கம்பீர குரலை இப்படி கேட்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
