புதுடில்லி, மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக, மேற்கு வங்க துவக்கப் பள்ளி கல்வி வாரியத் தலைவராக இருந்த, திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மாணிக் பட்டாச்சார்யா மீது சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது.
இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை, சமீபத்தில் விசாரணை நடத்தியது. ஆனால், முறையான ஒத்துழைப்பு அளிக்காததால் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து, எம்.எல்.ஏ., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், அவருடைய மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement