திருச்சி சூர்யா சிவா வெளியிட்ட வீடியோ… அவரது தந்தை திருச்சி சிவா ஹிந்தியில் பாடினாரா?

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. திமுகவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த அவர், கட்சியில் தமக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கூறி சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார். அவருக்கு அக்கட்சியில் பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மததிய பாஜக அரசு ஹிந்தியை பல வழிகளிலும் திணிப்பதாக தமிழகத்தை ஆளும் திமுக தொடர் குற்றம்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் வெறும் அரசியலுக்காகதான். ஆனால் திமுகவின் மொழி அரசியல் இனிமேலும் தமிழகத்தில ஈடுபடாது என்ற பொருள்படும்படி, திருச்சி சிவாவின் மகனான திருச்சி சூர்யா சிவா தமது ட்விட்டர் பதிவில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

“திமுக தலைவர்களின் கொள்கை சான்று . மக்கள் இனி ஏமாற தயாராக இல்லை. உங்கள் மொழி அரசியல் இனி தமிழ்நாட்டில் எடுப்படாது” என்ற கேப்ஷனுடன் 30 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் திருச்சி சூர்யா சிவாவின் தந்தையான

முதலில் இவ்வாறு பேசுகிறார். “ஹிந்தி தெரிந்தால்தான் ஏதோ இந்தியாவி்ல் உலா வரமுடியும் என்று “எல்லோரும் தவறான ஒரு கருத்தை சொல்லி வருகிறீர்கள். நான் சற்று ஏறக்குறைய 20 ஆண்டுகள் எம்பி ஆக இருக்கிறேன். ஆனால் எனக்கு இன்னமும் ஹிந்தி தெரியாது” என்று அவர் பேசுகிறார். அடுத்து அவர் பிரபலமான ஹிந்தி பாடல் ஒன்றை மைக்கின் முன்னால் பாடுவது போன்று காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

ஹிந்தி தெரியாது என்று சொல்கின்றவர் அந்த மொழியில் எப்படி பாட்டு பாட முடியும்? எல்லாம் ஏமாற்று வேலை என்று, தமது தந்தையை வைத்தே தமது இந்த ட்விட்டர் பதிவின் மூலம் மறைமுகமாக சொல்லி உள்ளார் திருச்சி சூர்யா.

ஆனால் அதேசமயம், திருச்சி சிவா ஏதோயொரு பொது நிகழ்ச்சியில் பேசி இருப்பதை அவர் ஹிந்தி பாடல் பாடுவது போன்ற எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.