திருமணமான ஒன்றரை மாதத்தில் நகை, பணத்துடன் மாயமான புதுமணப்பெண்! அதிர்ச்சியில் காதல் கணவன்!

திருமணமான ஒன்றரை மாதத்தில் காதல் திருமணம் முடித்த புதுமணப்பெண் நகை பணத்துடன் மாயமான சம்பவம் சென்னை தாம்பரத்தில் நடந்துள்ளது.
சென்னை மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 1வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்(50), இவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மேகலா, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் நடராஜன்(30), கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பேக்கரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அபிநயா(28) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர்.
image
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி இருவருக்கும் ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்று உள்ளது திருமணம் ஆகி ஒன்றரை மாதம் ஆன நிலையில் கணவன் மனைவிக்குமிடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேற்று வீட்டில் இருந்த 17 சவரன் நகை மற்றும் 20,000 ரூபாய் பணம் ஆகியவற்றுடன் அபிநயா மாயமாகி உள்ளார்.
image
எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் நடராஜன் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.