உசிலம்பட்டி: ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தேனி மாவட்டத்தில் நேற்று பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் நிரந்தரமாக நீர் திறக்க அரசாணை வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் வரை கொண்டு சென்று நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும்’’ என தெரிவித்தார். அப்போது நதிகள் இணைப்பு பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அமைச்சர் நழுவிச் சென்றார்.
