புதுடில்லி : ‘பாகிஸ்தானுடனான நீர் பங்கீடு தொடர்பாக நடுநிலை நிபுணர் மற்றும் நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றை உலக வங்கி நியமித்துள்ளதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது’ என, மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
இதுகுறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியா – பாகிஸ்தான் இடையே ஓடும் சிந்து நதி நீரை பங்கீடு செய்து கொள்வது மற்றும் நீர்மின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 1960 சிந்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதற்காக சிந்து ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் இடம்பெற்றுள்ள இருநாடுகளின் பிரதிநிதிகளும் ஆண்டுதோறும் கூடி ஆலோசித்து, அந்தந்த ஆண்டுக்கான பங்கீட்டை இறுதி செய்வர்.
இதில் இரு நாடுகளுக்கு இடையே சமீபகாலமாக முரண்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, உலக வங்கி தலையிட்டு, நடுநிலை நிபுணர் மற்றும் நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றை நியமித்துள்ளது.
இருநாடுகளுக்கு இடையேயான பங்கீட்டை நடுநிலை நிபுணர் மற்றும் நடுவர் மன்ற நீதிபதி ஆகிய இருவரும் கவனமாகவும், நியாயமாகவும் பரிசீலிப்பர் என உலக வங்கி கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் உலக வங்கியின் செயல்பாடுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement