ஓசூர்,:இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ‘டி.வி.எஸ்., மோட்டார்’ புதிய பரிணாமத்தில், டி.வி.எஸ்., ரைடர் ஸ்மார்ட் – எக்ஸ் — கனெக்ட் டி.எப்.டி., எனும் பைக்கை நேற்று அறிமுகப்படுத்தியது. இந்த பைக், ‘விகட் கறுப்பு’ மற்றும் ‘பயரி மஞ்சள்’ நிறங்களில் வெளியாகின்றன.
இந்திய சந்தையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான ‘டி.வி.எஸ்., ரைடர் 125’ பைக், புதிய தொழில்நுட்ப உருமாற்றத்துடன் தற்போது களமிறக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த டி.வி.எஸ்., ரைடர் பைக்கில், கூடுதலாக 5 அங்குல ‘டி.எப்.டி., இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கட்டிங் எட்ஜ் புளூடூத் சிஸ்டம்’ மற்றும் செயலி மூலம் ஸ்மார்ட் போன் இணைப்பு, ‘நேவிகேசன் அசிஸ்ட், இன்கமிங் கால், இமேஜ் டிரான்ஸ்பர்’ போன்ற வசதிகள், துல்லியமான பயண தரவுகள் என பல அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
‘ஸ்ட்ரீட் பைட்டர்’ போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கில், ‘எக்கோ திரஸ்ட் பியூயல் இன்ஜெக் ஷன்’ தொழில்நுட்பம் கொண்ட 124.8 சி.சி., ஏர் மற்றும் ‘ஆயில் கூல்டு’ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 8.37 கிலோ வாட் பவருடன், 11.2 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் இந்த பைக் வெளிப்படுத்துகிறது. இதன் அதிகபட்ச வேகம் 99 கிலோ மீட்டர். மேலும், 60 கிலோ மீட்டர் வேகத்தை, வெறும் 5.9 வினாடிகளில் கடக்கிறது.
எரிபொருள் சேமிப்புக்காக ‘டி.வி.எஸ்., இன்டெலிகோ’ தொழில்நுட்பம், ‘5 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் மோனோ ஷாக் சஸ்பென்ஷன், லோ பிரிக்ஷன் பிரன்ட் சஸ்பென்ஷன், ஸ்பிளிட் சீட்டுகள், 17 அங்குல அலாய் சக்கரங்கள், ஹெல்மெட் ரிமைண்டர், யு.எஸ்.பி., சார்ஜர் என பல்வேறு வசதிகளும் இதில் உள்ளன.
இந்த பைக், சந்தையில் இருக்கும் ஹோண்டா சி.பி., ஷைன் 125 எஸ்.பி, ஹோண்டா எஸ்.பி., 125, கீவே எஸ்.ஆர்., 125, பஜாஜ் பல்சர் 125 ஆகிய பைக்குகளுடன் களம் காண்கிறது.
இந்த பைக்கின் விலை, 99,990 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்