மசூதி தரைமட்டம்.. முஸ்லீம்கள் ஷாக்; பகீர் வீடியோ உள்ளே!

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் ஜகார்த்தா இஸ்லாமிய மையம் உள்ளது. இங்குள்ள பெரிய மசூதி கட்டிடத்தில் கடந்த புதன்கிழமை புதுப்பித்தல் பணிகள் நடந்து கொண்டு இருந்தது.

அப்போது பெரிய மசூதியின் ராட்சத குவிமாடம் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதற்குள் மசூதியின் குவிமாடம் இடிந்து விழுந்தது. குருவி மாடம் விழுவதற்கு சற்று முன்பு அதில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை கிளம்பியதை வெளியான வீடியோ காட்சிகள் தெரிவிக்கின்றன.

ஆளுநருக்கு ஆப்பு வைத்த திமுக; போகும் இடமெல்லாம்.. அரசியல்!

அதே சமயம் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அந்த நேரத்தில் இஸ்லாமிய மையம் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு இருந்ததால் தீ விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்து அல்லது அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இடிபாடுகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் கட்டிடத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மசூதியைத் தவிர, இஸ்லாமிய மைய வளாகத்தில் கல்வி, வணிக மற்றும் ஆராய்ச்சி வசதிகளும் உள்ளன.

ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு வேலை; 22ம் தேதி நடக்கிறது ‘ரோஸ்கர் மேளா’!

இந்த மசூதியின் குவிமாடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கும்போதும் இதேப் போல் தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏற்பட்ட தீயை அணைக்க 5 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் போராடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தீ விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. இதில் மசூதியின் குவிமாடம் இடிந்து விழும் காட்சிகள் பதிவாகி முஸ்லீம்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.