காந்திநகர்:கன ரக மற்றும் இலகு ரக வாகனங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான, ‘அசோக் லேலாண்டு’ குஜராத்தில் நடந்து வரும் பாதுகாப்பு கண்காட்சி 2022ல், மூன்று அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருக்கும் இந்த கண்காட்சியில், அசோக் லேலாண்டின் ‘ஜீட் 4X4’ எனும் ராணுவ போக்குவரத்து வாகனம், ‘லைட் புல்லட் புரூப் கவச வாகனம் 4X4’ மற்றும் ‘டி-72’ எனும் ராணுவ டேங்கிற்கான ‘கியர் பாக்ஸ்’ ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
இவற்றை, கார்கில் போர் வீரரான கர்னல் சோனம் வாங்சுக் அறிமுகப்படுத்தினார்.
இதுகுறித்து, அசோக் லேலாண்டு நிர்வாக தலைவர் தீரஜ் ஹிந்துஜா கூறியதாவது:
இந்திய ராணுவ போக்குவரத்துக்கான, அனைத்து தீர்வுகளை கொடுக்கும் ராணுவத்தின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக, அசோக் லேலாண்டு உருவெடுத்துள்ளது.
வெளியிடப்பட்ட தொழில்நுட்பங்கள், எங்கள் நிறுவனத்தின் திறனை காட்டுவதாக உள்ளன.
மேலும், தயாரிப்புகளை விரிவுபடுத்தி, ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்துக்கு, குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முயற்சித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement