நியூயார்க், இந்தியாவில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் கடத்தி செல்லப்பட்ட 32 கோடி ரூபாய் மதிப்பிலான, 307 பழங்கால பொருட்களை இந்தியாவிடம், அமெரிக்கா ஒப்படைத்தது.
பல்வேறு நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட பழங்கால பொருட்களை மீட்டு சம்பந்தப்பட்ட நாடுகளிடம் ஒப்படைக்கும் பணியை, அமெரிக்காவின் பழங்கால பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு செய்து வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் 672 கோடி ரூபாய் மதிப்பிலான 682 பழங்கால பொருட்கள், 13 நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில், நம் நாட்டில் இருந்த பல்வேறு காலகட்டங்களில் கடத்தி செல்லப்பட்ட 307 பழங்கால பொருட்களை, அமெரிக்கா நேற்று முன்தினம் ஒப்படைத்தது. இதன் மதிப்பு 32 கோடி ரூபாய்.
இதில், 235 பொருட்களை இந்தியாவில் இருந்து கடத்தி, அமெரிக்காவில் விற்று வந்த சுபாஷ் கபூர் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் இருந்து மீட்கப்பட்டதாக மன்ஹாட்டன் மாவட்ட அட்டர்னி தெரிவித்தார்.
சுபாஷ் கபூர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நியூயார்க்கில் உள்ள இந்திய துாதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த பழங்கால பொருட்கள், அமெரிக்காவுக்கான இந்திய துாதர் ரந்திர் ஜெய்ஸ்வாலிடம் ஒப்படைக்கப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement