சர்தார் (தமிழ்)

இயக்குநர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் ஸ்பை திரில்லர் படமான ‘சர்தார்’ திரைப்படம் அக்டோபர் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கார்த்தி இதில் டபுள் ரோலில் உளவாளியாகவும், போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார்.
ப்ரின்ஸ் (தமிழ்)

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘ப்ரின்ஸ்’ திரைப்படம். ரொமான்டிக் காமெடி ஜானரில் வித்தியாசமான கதைகளத்துடன் இப்படம் களமிறங்குகிறது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு OTT-யில் வெளியாகும் படைப்புகள்
பேட்டைக்காளி (தமிழ் – Aha)

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் இயக்குநர் ராஜ்குமார் உருவாக்கியுள்ள இந்த வெப் சிரீஸ் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 21-ம் தேதி வெளியாகிறது. தமிழ் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளை பிடிப்பதிலிருக்கும் சிக்கல்களையும் மாடு பிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களிடையே இருக்கும் முரண்பாடுகளையும் பற்றியதுதான் இதன் கதைக்களம்.
பிரம்மாஸ்திரா (இந்தி, தமிழ் – டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்)

இயக்குநர் அயன்முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், அலியா பட், அமிதாப் பச்சன், நாகர்ஜுனா, ஷாருக்கான் ஆகியோர் நடித்த ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. தற்போது, இப்படம் அக்டோபர் 23-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
கணம் (தமிழ் – Sony Liv)

ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் ஷர்வானந்த், ரிது வர்மா, அமலா, ரமேஷ் திலக், சதீஷ் உள்ளிட்டோர் நடித்த படம் ‘கணம்’. கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தியேட்டர்களில் வெளியான இத்திரைப்படம் அக்டோபர் 20ல் ‘Sony Liv’ ஓடிடியில் வெளியாகவுள்ளது.
Krishna Vrinda Vihari (தெலுங்கு – Netflix)

இயக்குநர் அன்னிஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நாகா சௌர்யா, ஷெர்லி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், திரையரங்கைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 23-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
28 Days Haunted (English – Netflix)

தொடராக வெளிவரவுள்ள இது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை அக்டோபர் 21-ம் தேதி வெளியாகிறது. ஹாரர் ஜானரில் ஒரு ரியாலிட்டி டிவி தொடர் பாணியில் உருவாகியிருக்கும் இதில் மூன்று டீம்கள் 28 நாள்கள் அமெரிக்காவின் அதிபயங்கர பேய் வரலாறு இருக்கும் இடங்களை விசிட் செய்வது போலக் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
From Scratch (English – Netflix)

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தொடராக வெளியாகவுள்ள இத்திரைப்படம் நாளை அக்டோபர் 21-ம் தேதி வெளியாகிறது.
The Peripheral 2022 ‧ Sci-fi (English- amazon prime)

சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் கிறிஸ்டோபர் நோலனின் சகோதரர் ஜோனதன் நோலன் மற்றும் லிசா ஜாய் உருவாக்கத்தில் தயாராகியுள்ள இந்த வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை அக்டோபர் 21-ம் தேதி வெளியாகிறது.
RockStar (Disney Plus Hotstar)

இதுதவிர இளம் இசையமைப்பாளரான அனிருத்தின் இசை கச்சேரியான ‘RockStar’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் அக்டோபர் 21ம் தேதி லைவ்வாக ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.