ஸ்ரீநகர்: காஷ்மீரில் அரசு பங்களாவை ஆக்கிரமித்துள்ள முன்னாள் முதல்வர் மெகபூரபா முப்தி உடனடியாக காலி செய்ய கோரி காஷமீர் அரசு நிர்வாகம். நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் குப்ஹார் சாலையில் முதல்வர் மற்றும் வி.வி.ஐ.பி.க்கள் தங்கும் அரசு பங்களா உள்ளது.. உச்ச பாதுகாப்புடன் கூடிய இப்பகுதியில் முன்னாள் முதல்வர் மெகபூபா கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில் அரசு பங்களாவை ஒரு வாரத்திற்குள் காலி செய்ய வேண்டும் என அவருக்கு ஜம்முகாஷ்மீர் அரசு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்ட ஆலோசனை
இது குறித்து மெகபூபா கூறியது, கடந்த 2005-ம் ஆண்டு முதல் தனது தந்தை முப்தி முகமது சையீத் முதல்வராக இருந்த போது அரசு பங்களா ஒதுக்கப்பட்டதாகவும், தனக்கு வேறு அரசு இல்லம் ஒதுக்கி தந்தால் , பங்களாவை விட்டு வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தனது வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை பெற்றுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement