ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் – அதிரடி சோதனையில் இறங்கிய அலுவலர்கள்

தீபாவளி பண்டிகை 24ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதனையொட்டி சென்னையிலிருந்து பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இப்படிப்பட்ட சமயத்தில் ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் மலை அளவு கட்டணத்தை வசூலிப்பது தொடர்கதையாகி இருக்கிறது. இந்த வருடம் ஆம்னி பஸ்களில் 3 நாள்கள் அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருக்கின்றன. ஆனால், கட்டண வசூலில் எந்ஹ்ட வித மாற்றமும் இல்லை. குறிப்பாக சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டுமென்று பலர் கோரிக்கை வைத்துவருகின்றனர். இதனையடுத்து  போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவின் பேரில் ஆணையர் நிர்மல் ராஜ் அறிவுறுத்தலை தொடர்ந்து சென்னை இணை ஆணையர்கள் ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் மற்றும் அலுவலர்கள் தலைமையில் வட்டார போக்கு வரத்து அலுவலர்கள், ஆய்வாளர்கள் அடங்கிய 9 குழுக்கள் ஆய்வுக்காக அமைக்கப்பட்டுள்ளன. 

இக்குழுவினர் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம், போரூர், செங்குன்றம், செங்கல்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில்  ஆய்வில் ஈடுபடுகின்றனர். மேலும், கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து பயணிகள் புகார் தெரிவித்தால் அதனை திருப்பி தருவதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அலுவலர்கள் கூறுகையில், “ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து இன்று முதல் தீவிரமாக கண்காணிக்கப்படும். தகுதிச்சான்று, பெர்மிட் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நிர்ணயம் செய்த கட்ட ணத்தை விட கூடுதலாக வசூலித்து இருந்தால் பயணிகளிடம் திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்” என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.