புதுடில்லி : ‘ஆண்ட்ராய்டு மொபைல் போன்’ இயங்குதளங்களில் இதர போட்டியாளர்களுக்கு சரிசமமான வாய்ப்பு அளிக்காமல் ஆதிக்கம் செலுத்துவதாக குற்றஞ்சாட்டி, ‘கூகுள்’ நிறுவனத்துக்கு 1,338 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
‘ஆண்ட்ராய்டு மொபைல் போன்’களில் தரவிறக்கம் செய்யப்படும் அனைத்து செயலிகளையும் கூகுள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் புதிதாக வாங்கும் ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் ஏற்கனவே தரவிறக்கம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதை அவர்கள் நீக்கவும் முடியாது.
இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் அளித்த புகாரை, இந்திய போட்டி கமிஷன் விசாரித்தது. இதர போட்டியாளர்களுக்கு சரிசமமான வாய்ப்பு அளிக்காமல் ஆதிக்கம் செலுத்தியதற்காக கூகுள் நிறுவனத்துக்கு 1,338 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement