வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புனே: பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதில் மக்களுக்கு ஆர்வம் இல்லை எனவும், கடந்த டிசம்பரிலேயே கோவிஷீல்டு தயாரிப்பை நிறுத்திவிட்டதாகவும், அப்போது கையிருப்பில் இருந்த 10 கோடி டோஸ் வீணானதாகவும், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்று உலகம் முழுவதும் பரவிய நேரத்தில் அதனை தடுக்க இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்ட ‛கோவிஷீல்டு’ தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்தது. இந்த தடுப்பூசியுடன், கோவாக்சின் தடுப்பூசியும் நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.
இரு டோஸ்கள் தடுப்பூசி செலுத்திய நிலையில் ஒமைக்ரான் வகை கோவிட் தொற்று பரவியதால் பூஸ்டர் டோசும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அமைப்பின் வருடாந்திர பொதுக் கூட்டம் புனேவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனாவாலா பங்கேற்றார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் கடந்த 2021 டிசம்பர் முதல் கோவிஷீல்டு தயாரிப்பை நிறுத்தி விட்டோம். அப்போது கையிருப்பில் இருந்த சுமார் 10 கோடி டோஸ்கள் காலாவதியாகி விட்டதால் வீணாகி விட்டது. பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதில் தற்போது மக்களிடையே ஆர்வம் இல்லை.
இதனால் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு தேவை இல்லை. ஒமைக்ரான் தொற்றை தடுக்கும் வகையில் தனித்துவமான கோவிட் தடுப்பூசி தயாரிப்பில் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement