கோவை: கோவை பால் உற்பத்தியாளர்கள் அக்.28-ம் தேதி முதல் உற்பத்தியை நிறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்ட உற்பத்தியாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் போராட்டம் குறித்து முடிவு செய்யப்பட்டது.
