டிஎம்எஸ் அருகே விபத்தில் சிக்கியவருக்கு முதலமைச்சர் உதவி…

சென்னை: தலைமைச்செயலகம் வந்துகொண்டிருந்தபோது, சென்னை  அண்ணா சாலையில் டிஎம்எஸ் அருகே விபத்தில் சிக்கியவருக்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உதவி செய்தார்.  விபத்தில் சிக்கியவரை மீட்டு பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.

அண்ணா சாலை வழியாக அலவலகம் வந்துகொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போது,  டிஎம்எஸ் அருகே விபத்தில் சிக்கியவரை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கான்வாய் பாதுகாப்பு வாகனத்திலிருந்து இறங்கி வந்து விபத்தில் சிக்கியவருக்கு உதவியுள்ளார்.  வாகனம் அண்ணாசாலையில் டிஎம்எஸ் அருகே வந்துகொண்டிருந்தபொது சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று கவிழ்ந்து இருப்பதையும் அதன் அருகில் ஒருவர் வலியால் துடித்துக்கொண்டிருப்பதையும் முதலமைச்சர் பார்த்துள்ளார். இதனையடுத்து தனது கான்வாயை நிறுத்த சொல்லிவிட்டு காரை விட்டு இறங்கி சம்பவம் நடந்த பகுதிக்கு சென்றவர், உடனடியாக பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்களை அழைத்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்க சொன்ன முதலமைச்சர், ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திராமல் அருகில் இருந்த ஆட்டோவில் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

 இதை அருகில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த விடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. Ads by வீடியோ தலைமை செயலகத்திலிருந்து புறப்படும் போதும், சாலையில் விபத்து ஏற்பட்டதை கண்டபோதும் மனிதாபிமானத்துடன் முதலமைச்சர் உதவி செய்துள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.