தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பான ‘மெசேஜ்’ மோசடி! டிஜிபி எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பான ‘மெசேஜ்’ மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும்  டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.

kமாநிலம் முழுவதும் கடந்த இரு மாதங்களாக, மின்கட்டணம் கட்டவில்லை, அதனால், உங்கள் மின்இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது. உடனே கீழேஉள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள், அல்லது இணையதளத்தை தொடர்பு கொள்ளுங்கள் என பலருக்கு குறுஞ்செய்தி (மெசேஜ்) வருகிறது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருவதுடன், இதுதொடர்பாக மின்வாரியத்திலும் புகார் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  வீடியோ பதிவில்,  மின் வாரியத்தில் இருந்து மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தியை அனுப்பவதாக மோசடி நபர்கள் குறுஞ்செய்தி அனுப்புவார்கள். பொதுமக்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வாறு ஏதேனும் குறுஞ்செய்தி அனுப்பினால் 100 அல்லது 112 எண்ணை அழைத்து தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் பணத்தை இழக்கும் பட்சத்தில், இந்தியாவில் இருந்தால் மீட்க வழி உண்டு. வெளிநாட்டிற்கு பணம் சென்றுவிட்டால் மீட்பது கடினம். இதையும் படிக்க: ”நல்ல கதை பெருசா ஜெயிக்கும்” – ‘சர்தார்’ மற்றும் ‘பிரின்ஸ்’ படங்கள் குறித்து சூர்யா மேலும், மோசடி நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.