தீபாவளி பண்டிகையை பொது பள்ளி விடுமுறையாக அறிவித்தது அமெரிக்கா: இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்


நியூயார்க் நகரில் 2023 ஆம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு பள்ளி பொது விடுமுறை.


தீபாவளி பண்டிகைக்காக ஆண்டு விழாவை பொது பள்ளி விடுமுறை நாளில் இருந்து நீக்கிய நியூயார்க். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 2023 ஆம் ஆண்டு முதல் தீபாவளி(DIWALI) பண்டிகை நாள் பள்ளிகளுக்கு பொது விடுமுறை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படும் இந்து மதத்தினரின் கொண்டாட்டமான தீபாவளிக்கு அடுத்த ஆண்டு முதல் அமெரிக்காவின் நியூயார்க் நகர பள்ளிகளுக்கு பொது விடுமுறை நாளாக இருக்கும் என மேயர் எரிக் ஆடம்ஸ் வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை பொது பள்ளி விடுமுறையாக அறிவித்தது அமெரிக்கா: இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் | Diwali Usa New York City Public School HolidayIMage: Twitter/@POTUS

இந்த அறிவிப்பின் போது மாநில சட்டமன்ற பெண்மணி ஜெனிபர் ராஜ்குமார் மற்றும் கல்வித் துறையின் அதிபர் டேவிட் பேங்க்ஸ் ஆகியோர் உடனிருந்தனர். 

தீபாவளி மிக முக்கிய இந்து பண்டிகை, ஆனால் இந்த பண்டிகை பௌத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் ஜைனர்கள் ஆகியோராலும் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் நியூயார்க்கில் இந்து, புத்த, சீக்கிய மற்றும் ஜைன மதங்களைச் சேர்ந்த 200,000 பேரை அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என மாநில சட்டமன்ற பெண்மணி ஜெனிபர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தீபாவளி பொது விடுமுறைக்காக நியூயார்க் நகரின் பள்ளி நாட்காட்டியில் ஜூன் மாதம் முதல் வியாழக்கிழமை பாரம்பரியமாக கொண்டாடும் ஆண்டு தினத்தை மாற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: 100 மில்லியன் கோவிட் தடுப்பூசி டோஸ்கள் அழிப்பு: காலாவதியானதால் சீரம் இந்தியா அதிரடி

பெருகிவரும் நியூயார்க்கர்களால் கொண்டாடப்படும் தீபாவளி-யுடன் ஒப்பிடும்போது, ஆண்டுவிழா தினத்தை “ஒரு தெளிவற்ற மற்றும் பழமையான நாள்” என்று ஜெனிபர் ராஜ்குமார் அழைத்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.