டெல்லி: நாட்டில் வெறுப்புணர்வை பரப்பும் மதவாத பேச்சுக்கள் அதிகரிப்பது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 21-ம் நூற்றாண்டில் மதத்தின் பெயரால் எந்த இடத்துக்கு வந்து சேர்ந்துள்ளோம் என்றும் நீதிபதிகள் வேதனை. அரசியலமைப்பு சட்ட 51-ஏ பிரிவு, அறிவியல் மனோபாவத்தை மக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது என்று நீதிபதிகள் கூறினார்.
