மயிலாடுதுறை: தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மயிலாடுதுறை மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடிப்பதற்காக நேற்று இரவு மீனவர்கள் சென்ற நிலையில், கனமழையினால் மீனவர்கள் கரைக்கு திரும்பிச் செல்ல கடற்படையினர் சமிக்ஞை கொடுத்துள்ளனர். தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகை இந்திய கடற்படை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
ஆனால் அந்த படகு நிற்காமல் சென்றதால் அந்த படகின் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் மயிலாடுதுறை மீனவர் வீரகுமார் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து மீனவரை மீட்ட உச்சிப்புள்ளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை வீரர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த மீனவர் வீரவேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.