போபால் :மத்திய பிரதேசத்தில் உள்ள பட்டாசு கிடங்கில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, மொரினா மாவட்டத்தில் உள்ள பான்மோரில் பட்டாசு சேமிப்பு கிடங்கு உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால், இங்கு ஏராளமான பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இங்கு நேற்று திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில், அங்கிருந்த நான்கு பேர் உயிரிழந்தனர்; ஏழு பேர் பலத்த காயமடைந்தனர். மேலும், சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.”இந்த விபத்து வெடி மருந்தால் ஏற்பட்டதா அல்லது காஸ் சிலிண்டர்வெடித்து ஏற்பட்டதா என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்,” என, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement