பிரான்ஸ் நாட்டில் கடுமையான எரிசக்தி நெருக்கடியால் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் காரணமாக எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், பிரான்சில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரான்ஸ் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தெருக்களில் இரவு முழுவதும் தேவையின்றி எரிந்து கொண்டிருக்கும் மின் குமிழ்களை
அந்நாட்டு இளைஞர்கள் அணைத்து மின்சாரத்தை சேமித்து வருகின்றனர்.
இதை முறையாக பின்பற்றினால் ஒவ்வொரு ஆண்டும் 7 இலட்சத்து 50 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் அளவு மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.