புளியமரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு: மின்சாரம் துண்டிப்பு; மக்கள் அவதி

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுற்று வட்டாரத்தில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. கெங்கவல்லி- தெடாவூர் நெடுஞ்சாலையில் ஆனணயாம்பட்டி ஊராட்சியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகே அமைந்துள்ள பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து மின்கம்பத்தில் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்துவுடன் மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் நிறுத்தம் செய்துள்ளனர்.

அப்பகுதியில் தொடர்ந்து வருவாய் துறை அலுவலர், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக ஜேசிபி வாகனம் மூலம் புளிய மரத்தை அகற்றினர். இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர். கெங்கவல்லி-தெடாவூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் தற்போது அப்பகுதியில் மின் வினியோகம் செய்வதற்காக பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.