மதுரை ஸ்பெஷல்… தீபாவளிக்கு டபுள் ஏற்பாடு- குட் நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே!

தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று மாலை முதல் பலரும் சொந்த ஊருக்கும், உறவினர்களை சந்திக்கவும், சுற்றுலாவிற்கும் புறப்பட்டு செல்வர். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பேருந்துகள், ரயில்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும். அந்த வகையில் மதுரை ரயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (06049) தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 22 சனிக்கிழமை அன்று இரவு 10.20 மணிக்கு புறப்படும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர்,

கோவில்பட்டி வழியாக அடுத்த நாள் காலை 9.00 மணிக்கு திருநெல்வேலி செல்லும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி – தாம்பரம் ரயில் (06050) திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 26ஆம் தேதி புதன்கிழமை அன்று மாலை 5.50 மணிக்கு புறப்படும். இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம்,

செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு அடுத்த நாள் அதிகாலை 04.10 மணிக்கு செல்லும். டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் – ராமேஸ்வரம் – தாம்பரம் இடையே மேலும் ஒரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 8.45 மணிக்கு புறப்படும் சென்னை – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06041)

சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் வழியாக ராமேஸ்வரத்துக்கு அடுத்த நாள் காலை 11 மணிக்கு செல்லும்.

“அரசியலிலிருந்து விலக தயார்” ஓபிஎஸ் பகிரங்க சவால்!

மறு மார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து ராமேஸ்வரம் – தாம்பரம் சிறப்பு ரயில் (06042) அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் செல்லும் என்று மதுரை கோட்ட ரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.