முதல்வருக்கு 10 ஆயிரம் பைன் போட்ருப்பாங்களோ? கான்வாயை நிறுத்தி.. ஆம்புலன்ஸ் சென்றது..

தமிழக முதலமைச்சர்

இன்று தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்ட நேரத்தில் அவரச ஒலியுடன் ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. அப்போது, காவலர்கள் முதலமைச்சர் கான்வாய் வாகனத்தை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்பாடு செய்தனர். ஆம்புலன்ஸ் சென்ற பிறகு முதலமைச்சர் காத்திருந்து புறப்பட்டார்.

முதல்வர் சுதாரிப்பதற்கு முன்பு காவலர்களே முதல்வர் கான்வாயை நிறுத்தி ஆம்புலன்ஸை முதலில் அனுப்பி வைத்த சம்பவத்துக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. மேலும், இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ஷேர் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக இன்று சென்னை அண்ணா சாலையில் விபத்தில் சிக்கிய நபரை முதல்வர் ஸ்டாலின் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த இரண்டு நிகழ்வும் இன்று கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் சாலையில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடாமல் செல்வோரிடம் அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய நடைமுறையை அரசு கொண்டு வந்துள்ளது. நேற்று இதுதொடர்பாக வெளியான உத்தரவில், சாலையில் அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடாமல் இடையூறு செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.

சாலையில் அவசரமாக செல்லும் ஆம்புலன்சுக்கு பெரும்பாலானோர் வழிவிடத்தான் நினைப்பார்கள், ஆனால், அது நாம் முன்னே இருக்கும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை பொருத்துதான் உள்ளது. இதற்கு முறையான வழிகாட்டுதலை அரசு வெளியிடாமல், அபராத தொகையை மட்டும் அறிவித்துவிட்டு செல்வது நியாயமல்ல என்றும் வாகன ஓட்டிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.