விளாடிமிர் புடினின் அந்த முடிவு கடைசி நொடியில் முறியடிக்கப்பட்டிருக்கலாம்: வெளிவரும் புதிய தகவல்


ரஷ்ய அதிகாரிகள் தரப்பு கடைசி நொடியில் அந்த முடிவை முறியடித்திருக்க வாய்ப்புகள் அதிகம்

சுனாமி மற்றும் நச்சு வாயுவாலான மேகக் கூட்டத்தை உருவாக்க புடின் முயற்சி மேற்கொள்வார் 

உக்ரைன் மீது அணு ஆயுதம் பயன்படுத்தும் விளாடிமிர் புடினின் முடிவானது கடைசி நொடியில் முறியடிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விளாடிமிர் புடின் எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுத தாக்குதலை முன்னெடுக்கலாம் என நேட்டோ நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அவர் ஏற்கனவே அதற்கான முடிவை முன்னெடுத்திருக்கலாம் எனவும், ஆனால் ரஷ்ய அதிகாரிகள் தரப்பு கடைசி நொடியில் அந்த முடிவை முறியடித்திருக்க வாய்ப்புகள் அதிகம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

விளாடிமிர் புடினின் அந்த முடிவு கடைசி நொடியில் முறியடிக்கப்பட்டிருக்கலாம்: வெளிவரும் புதிய தகவல் | Putin Detonate Nuclear Bomb Sabotage

@AFP

மேலும், பிரித்தானிய பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் அமெரிக்கா புறப்பட்டு, ரஷ்யா- உக்ரைன் தொடர்பில் ஆலோசனை முன்னெடுத்துள்ளதும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

மட்டுமின்றி, கருங்கடல் பகுதியில் அணு ஆயுத தாக்குதலை முன்னெடுத்து, சுனாமி மற்றும் நச்சு வாயுவாலான மேகக் கூட்டத்தை உருவாக்க விளாடிமிர் புடின் முயற்சி மேற்கொள்வார் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் போர்க்களத்தில் அணு ஆயுதம் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் ஆர்க்டிக் பகுதியில் சோதனை ஒன்றை முன்னெடுக்க புடினுக்கு திட்டமிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

விளாடிமிர் புடினின் அந்த முடிவு கடைசி நொடியில் முறியடிக்கப்பட்டிருக்கலாம்: வெளிவரும் புதிய தகவல் | Putin Detonate Nuclear Bomb Sabotage

Credit: East2West

சமீப நாட்களில் ரஷ்யா தரப்பில் பயணிகள் விமானங்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்கள் அடிக்கடி வழங்கப்பட்டுள்ளதும்,
நார்வேயின் எல்லைக்கு அருகில் உள்ள பேரண்ட்ஸ் கடலில் தீவிரப் பயிற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதும் ஆய்வாளர்கள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர்.

இதே பகுதியில் தான் ரஷ்யாவின் ராட்சத நீர்மூழ்கிக் கப்பல் சில நாட்களுக்கு முன்னர் காணப்பட்டது.
மேலும், இந்த மாதத்தில் இருமுறை அணு ஆயுத சோதனைகளுக்கு புடின் உத்தரவிட்டும், அது நடைமுறைக்கு வரவில்லை என்றே கூறப்படுகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.