புதுடில்லி: ஜனநாயகம் மற்றும் மத நடுநிலை தன்மை கொண்ட நாட்டில் வெறுப்பை தூண்டும் பேச்சுகள் கவலை அளிக்கிறது என உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
ஷாகீன் அப்துல்லா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: இது 21ம் நூற்றாண்டு. மதத்தில் பெயரால் நாம் எங்கு சென்று கொண்டு இருக்கிறோம். ஜனநாயகம் மற்றும் மத நடுநிலை நாட்டில் வெறுப்பை தூண்டும் பேச்சுகள் கவலை அளிக்கின்றன என தெரிவித்த நீதிபதிகள், அத்தகைய குற்றங்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அடங்கிய பட்டியலை தாக்கல் செய்யும்படி டில்லி, உ.பி., மற்றும் உத்தரகண்ட் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், வெறுப்பை தூண்டும் பேச்சுகள் தொடர்பாக முறையாக புகார் வரும் வரை காத்திருக்காமல், போலீசார் மற்றும் மாநில அரசுகள் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement