24 மணித்தியாலயத்திற்கு மேலாக காய்ச்சல் : வைத்தியரை நாட வேண்டும்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ,டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்களின் பெருமளவில் மேல் மாகாணத்தில் காணப்படுவதாக டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர கூறினார்.

இந்த வருடத்தில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை 61,391.

இதுதொடர்பாக டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் அமர வீர மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது பருவ பெயர்ச்சி காலநிலையுடனான மழையினால் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களில் நீர் தேங்குவதால் மீண்டும் நுளம்புகள் பெருகும் அபாயம் உண்டு.

2019 ஆம் ஆண்டில் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதேபோன்று கடந்த 10 மாதங்களில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். அடையாளம் காணப்பட்ட 31 சுகாதார வைத்திய பிரிவுகளில் டெங்கு நோய் அனர்த்த நிலை காணப்படுகின்றது.

கொழும்பு மாநகரம் அடங்களாக ஏனைய பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் 10 அனர்த்த வலையங்கள் உண்டு. எனவே காய்ச்சல் இருக்குமாயின், ஓய்வு எடுப்பது முக்கியமாகும். 24 மணித்தியாலயத்திற்கு மேலாக காய்ச்சல் இருக்குமாயின் வைத்தியரை நாட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.