அயோத்தி : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் அமைந்துள்ள பிரமாண்ட படித்துறைகளில், இன்று 18 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் பிரமாண்ட படித்துறைகள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டு தோறும் தீபாவளியை ஒட்டி லட்சக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றி தீப உற்சவம் கொண்டாடப்படும். இதேபோல் இந்த ஆண்டும் பிரமாண்ட கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அயோத்தி நகர கமிஷனர் நவ்தீப் ரின்வா கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அயோத்தியில் இன்று 18 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படும். இதில், சரயு நதிக்கரையில் உள்ள படித்துறைகளில் 15 லட்சம் விளக்குகளும், நகரின் பிரதான இடங்களில் மூன்று லட்சம் விளக்குகளும் ஏற்றப்படும்.
இதற்காக 22 ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், ‘லேசர் ஷோ’ மற்றும் வாண வேடிக்கை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement