இந்த இளம் நடிகரின் படத்தில் கெஸ்ட் ரோலில் ரஜினிகாந்த்?

‘அண்ணாத்தே’ படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.  ‘பீஸ்ட்‘ படத்தின் சொதப்பலால் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிக்கமாட்டார் என்று ஆரம்பத்தில் பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், தற்போது இந்த படத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட படத்தின் 60% பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது மற்றும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.  தற்போது தீபாவளி பண்டிகை வருவதால் சற்று இடைவெளி விட்டு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு நவம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்தை வைத்து ‘தலைவர் 170’ படத்தை டான் படம் மூலம் பிரபலமான சிபி சக்கரவர்த்தி இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதனையடுத்து ‘தலைவர் 171’ படத்தை தேசிங் பெரியசாமி இயக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் நடிகரின் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகப்போகும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகப்போகும் மூன்றாவது படமாகும், இந்த படத்தில் இளம் நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.  இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை, இப்படத்திற்கான கதையை தயாரித்து வைத்திருக்கும் ஐஸ்வர்யா அதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தனது தந்தையை நடிக்குமாறு வலியுறுத்தியாகவும், அதற்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது, விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.