இலங்கையில் வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கான முக்கிய தகவல்!


வாகனம் கொள்வனவு செய்ய விரும்பும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) வாகனங்களின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, வாகனம் கொள்வனவு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம் என  உள்ளூர் வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிதளவு குறைந்துள்ள வாகனங்களின் விலை

இலங்கையில் வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கான முக்கிய தகவல்! | Information Those Waiting To Purchase A Vehicle

வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதாகவும், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் கையில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை மாத்திரமே சந்தையில் புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் யோசிக்க முடியாது. வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறையவில்லை, ஆனால் சிறிதளவு குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குத்தகையில் வட்டி செலுத்துதல் அதிகரித்து வருவதாலும், வைப்பு செய்பவர்களுக்கு அதிக வங்கி வட்டி விகிதங்களாலும், தங்கள் வாகனங்களை விற்பனை செய்த பின்னர் பணத்தை வைப்பு செய்யும் போக்கு உருவாக்கப்பட்டுள்ளது  என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

குத்தகை வசதிகளுக்குச் செல்ல வேண்டாம் என உள்ளூர் விற்பனையாளர்கள் மக்களைக் கேட்டுக்கொண்டனர், ஆனால் யாராவது கொள்வனவு செய்ய விரும்பினால், குத்தகை விகிதங்கள் அதிகரிப்புக்கு முன்னர் இருந்ததைப் போலவே இருப்பதால், அவர்கள் அதற்குச் செல்லலாம்.

எனவே, வாகனம் கொள்வனவு செய்ய இதுவே சிறந்த நேரம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.