எடப்பாடியை எதிர்த்து டயர்டு ஆயிட்டாரா? மருது அழகுராஜ் அரசியலிலிருந்து விலகல்!

எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்த மருது அழகுராஜ் சில மாதங்களுக்கு முன்னர் பன்னீர் செல்வம் பக்கம் நகர்ந்து எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து வந்தார். தற்போது அவர் அரசியலிலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

யார் இந்த மருது அழகுராஜ்?

அதிமுக பொதுக்கூட்டமாக இருந்தாலும், அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் ஜெயலலிதாவுக்கு உரை வடிவமைத்துக் கொடுத்தவர் மருது அழகுராஜ். நமது எம்ஜிஆர் நாளிதழில் எதிர் கட்சியினரை வசைபாடி எழுதவேண்டும் என்றாலும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு எழுச்சி பெற எழுதவேண்டுமானாலும் அந்த பணிக்கு மருது அழகுராஜையே கை காட்டிவந்தார் ஜெயலலிதா.

தேமுதிக, சமக ஆகிய கட்சிகளில் இருந்த மருது அழகுராஜ் 2008 முதல் அதிமுகவில் இருந்து வந்தார். அன்றிலிருந்து அவரது எழுத்து அதிமுகவுக்குள் பல ரூபங்களில் வெளிப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் உரைகளை எழுதிக் கொடுத்தவர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

கடந்த ஜூன் மாதம்

தரப்பால் ஓ.பன்னீர் செல்வம் ஓரங்கட்டப்பட்டு, நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்து கடந்த ஜூன் 29ஆம் தேதி நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்டார்.

அதன் பிறகு, ஓபிஎஸ் அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுமையாகச் சாடி வந்தார். இந்நிலையில் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

“எழுத்து, பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் என்னை விடுவித்துக் கொள்கிறேன். இதுகாலம் வரை முதுகு தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி. என் கருத்துகளால் யாரேனும் காயப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்”
என்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.