ஓபிஎஸ் சொன்னதை கேட்காத மாஜி அமைச்சர்கள்: கோவை செல்வராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சம்பந்தமாக

ஆதரவாளர் கோவை செல்வராஜ் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையத்தின் அறிக்கையும், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கையும் வெளிவந்துள்ளது. இந்த 2 சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய முதல்வருக்கு நன்றி. ஆணையங்களின் அறிக்கைகள் வெளிவந்து 6 நாட்கள் ஆகிறது. ஆனால்,

வாயை திறந்து பேசமால் இருப்பது வேடிக்கையாக உள்ளது. தூத்துக்குடி சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று எடப்பாடி சொல்கிறார். அவர் உள்பட தவறு செய்தவர்கள் மீது தனி நீதிபதியை அமைத்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.

சினிமா போஸ்டர் ஒட்டி கொண்டு இருந்தவர்களை அதிமுகவில் அமைச்சர்களாக ஆக்கியவர் ஜெயலலிதா என்ற கோவை செல்வராஜ், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரி இல்லாத நேரத்தில் அவரை வெளிநாடு அழைத்து சென்று மேல்சிகிச்சை தரவில்லை. இதற்கு முழு பொறுப்பும் அந்த நேரத்தில் அமைச்சர்களாக இருந்த அனைவரும்தான். அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வாயை திறக்கவே இல்லை. ஜெயலலிதா மரணம் அடைந்த போது அமைச்சராக இருந்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.” என்றார்.

ஜெயலலிதாவை மேல்சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல வேண்டும் என்று ஓபிஎஸ் கூறினார். ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் ஒரு சில அமைச்சர்கள் அவரை வெளிநாடு அழைத்துச்செல்ல ஒத்துழைக்கவில்லை. அந்த சமயத்தில் ஓபிஎஸ், சொல்லை அமைச்சர்கள் யாரும் கேட்கவில்லை என்றும் கோவை செல்வராஜ் குற்றம் சாட்டினார்.

ஓபிஎஸ், சசிகலா இருவரும் இணைந்து ஜெயலலிதாவை கொன்றார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த கோவை செல்வராஜ், ஜெயக்குமார் அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லி ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று ஏன் அழுத்தும் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன் அவரை கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை ஒழுங்காக சிகிச்சை அளிக்கவில்லை. நல்ல முறையில் சிகிச்சை கொடுத்து இருந்தால் இன்னும் 15 வருடங்கள் அவர் நன்றாக இருந்திருப்பார். ஜெயலலிதாவிற்கு அதிக அளவில் இனிப்புகள், ஐஸ்கிரீம் தந்து அவரை சித்திரவதை செய்து கொடூரமாக கொன்று இருக்கிறார்கள். ஜெயலலிதாவை கொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இனிப்பு வகைகளை மருத்துவமனை அவருக்கு கொடுத்ததா?” எனவு கேள்வி எழுப்பினார்.

அப்போலோ மருத்துவமனை 6 கோடிக்கு பில் மட்டுமே போட்டார்கள். ஜெயலலிதாவை காப்பாற்றவில்லை. அப்பல்லோ மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு எந்த நிலைமை ஏற்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீதிபதி முறையான நீதி வழங்கியது போல் ஜெயலலிதாவின் கொலை வழக்கிற்கும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கிற்கும் நீதி தரவேண்டும் எனவும் முறையான விசாரணை நடத்தி நீதி தரவில்லை என்றால் சாகும் வரை அம்மாவின் சமாதியில் தொண்டர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாகவும் கோவை செல்வராஜ் அப்போது கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.