நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள் ஈரான் நாட்டில் இருந்து மீன் பிடிக்க சென்றவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கத்தார் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை மற்றும் இனயம்புத்தன் துறையை சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த அக்டோபர் 12ம் தேதி ஈரான் நாட்டிலிருந்து மீன்பிடி தொழில் செய்யச் சென்றனர். மீனவர்கள் குறும்பனையை சேர்ந்த சிபு மரியவிக்டர், ஜோஸ் (பிரடின்) லியோன், மெஸ்பின் அக்சரன் அமல்ராஜ், அருண் நஸ்ரேன், நிதின், கிரண், இனயம்புத்தன்துறையை சேர்ந்த பிரவின் ஆகிய ஏழு பேரை எல்லைதாண்டி மீன்பிடித்ததற்காக கடந்த 14ம் தேதி கத்தாரில் சிறைபிடிக்கப்பட்டனர். இவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
