கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த லத்தேரி பஸ் நிறுத்தம் அருகில் போலீஸ் நிலையம் உள்ளது. இதன் அருகில் வயல்வெளிகளும், அடர்ந்த மரங்களும் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை போலீஸ் நிலையத்தில் உள்ள கேட் வழியாக ஒரு பாம்பு நுழைந்தது.
இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்தபடி ஓடிவிட்டனர். தகவல் தெரிந்து போலீசார் வருவதற்குள் பாம்பு திடீரென மறைந்து விட்டது. அது கட்டுவிரியன் பாம்பு என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.