விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகில் சேத்தூரில் சந்தன மாரியப்பன் (46 வயது) என்பவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவியும், இரு மகள்களும் இருக்கின்றனர். இதில் மூத்த பெண்ணுக்கு திருமணமான நிலையில் இளைய பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
13 ஆண்டு காலமாக சந்தன மாரியப்பன் கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு கை, கால் செயல்படாமல் இருந்ததால் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். பாண்டி செல்வி தான் கூலி வேலைக்கு சென்று அவர்களது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி சந்தன மாரியப்பன் தற்கொலை செய்து விட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதன் பேரில் போலீசார் சந்தன மாரியப்பனின் உடலை மீட்டு பிரயோத பரிசோதனைக்காக ராஜபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த பிரேத பரிசோதனை முடிவில் சந்தனம் மாரியப்பன் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் பாண்டி செல்வியிடம் கிடுக்கப் பிடி விசாரணை மேற்கொண்டதில், “கணவர் இயலாமல் இருந்ததால் என்னை சந்தேகப்பட்டு அவமரியாதையாக பேசினார்.
எனவே, அவரது சொல்லை தாங்க முடியாமல் கட்டையால் அடித்தும் கழுத்தை நெரித்தும் அறுத்தும் கொலை செய்துவிட்டேன்.” என்று தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, போலீசார் பாண்டிச்செல்வியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.