கொழும்பில்,14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (22) இரவு 10.00 மணி முதல் 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 02, 03, 04, 05, 07, 08, 09, 10 ஆகிய பகுதிகளில் இன்று (22) இரவு 10.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (23) நண்பகல் 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படுமன சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளதன் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாகவும், இது தொடர்பில் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதவாகவும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

எனவே, போதியளவான நீரை சேகரித்து வைப்பதன் மூலம் அசௌகரியங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பாவனையாளர்களை சபை அறிவுறுத்தியுள்ளது.

நீர் தடை ஏற்படும் பகுதிகள் வருமாறு:
கொழும்பு 1 – கோட்டை
கொழும்பு 2 – கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ்
கொழும்பு 3 – கொள்ளுப்பிட்டி
கொழும்பு 4 – பம்பலப்பிட்டி
கொழும்பு 5 – ஹெவ்லாக் டவுன், கிருலப்பனை, கிருலப்பனை வடக்கு, நாரஹேன்பிட்டி
கொழும்பு 6 – வெள்ளவத்தை, பாமன்கடை
கொழும்பு 7 – கறுவாத்தோட்டம்
கொழும்பு 8 – பொரளை
கொழும்பு 9 – தெமட்டகொட
கொழும்பு 10 – மருதானை, பஞ்சிகாவத்தை
கொழும்பு 11 – புறக்கோட்டை
கொழும்பு 12 – புதுக்கடை, வாழைத்தோட்டம்
கொழும்பு 13 – கொட்டாஞ்சேனை, புளூமெண்டல்
கொழும்பு 14 – கிராண்ட்பாஸ்
கொழும்பு 15 – மோதர, முகத்துவாரம், மட்டக்குளி, மாதம்பிட்டிய

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.