சென்னை: க்யூஆர் கோடு மூலம் ரயில் நிலையத்திற்கு உள்ளே இருந்து கொண்டே முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பெறலாம் என்ற தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்கள், சீசன் டிக்கெட், மெயில், விரைவு மற்றும் அதி விரைவு ரயில்களுக்கான முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகளை பொதுமக்கள் யூடிஎஸ் மொபைல் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த செயலியில் ஜியோ பென்சிங் அனுமதி உள்ளதால் ரயில் நிலையம் அல்லது தண்டவாளங்களுக்கு அருகில் நின்று இந்த செயலியின் மூலம் டிக்கெட் பெற முடியாது. தண்டவாளம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் தான் டிக்கெட்டு பதிவு செய்ய முடியும்.
தற்போது இந்த வசதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் ரயில் நிலையத்திற்கு உள்ளே இருந்து டிக்கெட்டு பெறலாம் என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் பெறுவது எப்படி?
- யூடிஎஸ் செயலியை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- ரயில் நிலையத்தில் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்.
- இதன்பிறகு சென்று சேரும் இடத்தை பதிவிட்டு டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்.