லக்னோ உத்தர பிரதேசத்தில் ‘டெங்கு’ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு ‘பிளாஸ்மா’ எனப்படும் ரத்த தட்டணுக்களுக்கு பதிலாக சாத்துக்குடி பழச்சாற்றை நரம்பு வழியாக செலுத்தியதால் அவர் மரணம் அடைந்தார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, பிரயாக்ராஜ் நகரில் பிரதீப் பாண்டே, 32, என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, பாண்டேவுக்கு ‘பிளாஸ்மா’ எனப்படும் ரத்த தட்டணுக்கள் மிகவும் குறைவாக இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பாண்டேவுக்கு நரம்பு வழியாக ரத்த தட்டணுக்கள் செலுத்த டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் ரத்த தட்டணுக்களுக்குப் பதிலாக சாத்துக்குடி பழச்சாற்றை செலுத்தியுள்ளனர். இதனால் பாண்டேவின் உடல்நிலை மோசமடைந்தது.
உடனே, உறவினர்கள் அவரை அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு, பாண்டேவுக்கு பழச்சாற்றை நரம்பு வழியாக செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை துவக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி பாண்டே உயிரிழந்தார்.
இதையடுத்து, தவறான சிகிச்சை அளித்த குளோபல் மருத்துவமனைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்; விசாரணை நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement