தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீதி தேதி வெளியாகியுள்ளது.

‘திருச்சிற்றம்பலம்’ வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘நானே வருவேன்’. தனுஷ் – செல்வராகவன் – யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் உருவானப் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

எனினும் இந்த திரைப்படம், முதல்நாளிலேயே நல்ல வசூலை ஈட்டியது. தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ அடுத்தநாள் வெளியானநிலையில், இந்தப் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்குமா என சந்தேகத்தை எழுப்பியது.

image

ஆனாலும் ‘நானே வருவேன்’ திரைப்படம் 4 நாட்களிலேயே 30 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல இந்தப் படத்திற்கான ஆதரவு குறைந்தது. இந்த திரைப்படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி ஒருமாதத்தை நெருங்க உள்ளநிலையில், இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வருகிற 27-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன் போட்டியினை தவிர்த்து இருந்தால்??

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் நானே வருவேன்க்கு வர வேண்டிய வரவேற்பும் வசூலும் கூடுதலாக கிடைத்திருக்கும் என்றே பலரும் கூறுகின்றனர். தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி இருந்தால் நிச்சயம் நான்கு நாள் வசூல் முழுமையாக கிடைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

நிச்சயம் நஷ்டம் இல்லை:

நானே வருவேன் படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை என்றாலும் படம் நஷ்டம் ஆகவில்லை என்று தயாரிப்பாளர் தானு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவும், படத்திற்கு போதிய ஸ்கிரீன்கள் கிடைக்கவில்லை என்று அவரே ஆதங்கமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.