தமிழகத்தில் துணை வேந்தர் நியமன சர்ச்சை: விளக்கம் அளிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் துணைவேந்தர் நியமனத்தில் 40 முதல் 50 கோடி வரை பெற்றுக்கொண்டு நியமனம்செய்த நிலை இருந்தது என்று முன்னாள் தமிழக ஆளுநர் பண்பாரிலால் புரோகித் குறிப்பிட்டதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க கவர்னரைச் சார்ந்தது என்றும் அதில் எவ்வித தவறு நடந்திருந்தாலும் கவர்னரையே சாரும் என்று முன்னாள் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் எம் எல் ஏ தர்மபுரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அந்த பேட்டியின் சாரம்சங்கள் இவை. 

2016ல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன் இந்த உயர் கல்வி துறை அமைச்சராக பணியாற்றக் கூடிய வாய்ப்பை எனக்கு வழங்கினார்கள். அம்மாவுடைய மறைவிற்குப் பின்பாக தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி யார் அவர்கள் தொடர்ந்து எனக்கு உயர்கல்வித்துறை அமைச்சராக பணியாற்றக்கூடிய வாய்ப்பையும் வழங்கினார்கள். ஒரு நிகழ்விலே மேதகு ஆளுநர் அவர்கள் பஞ்சாப் ஆளுநராக இருக்கக்கூடியவர் நமது தமிழகத்தில் இருக்கும் போது, தமிழகத்தின் நிலைமை துணை வேந்தர்களை நியமனம் செய்யும் பொழுது 40 கோடி முதல் 50 கோடி வரை பணம் பெற்றுக் கொண்டு நியமனம் செய்த நிலை இருந்தது என்று சுட்டிக் காட்டி இருக்கின்றார்கள்.

அது போன்ற நிலை தமிழகத்தில் இருந்ததில்லை. எடப்பாடி யார் ஆட்சி காலத்தில் பார்க்கின்ற பொழுது அவருக்கு ஆளுநராக பணியாற்றக்கூடிய வாய்ப்பு இருந்தது. இன்றைக்கு துணை வேந்தர் நியமனம் என்பது எப்படி இருந்தது, என்பதை நான் ஏற்கனவே, அவர் தமிழகத்தில் ஆளுநராக பணியாற்றக் கூடிய காலகட்டத்தில் ,கோடி கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு துணைவேந்தர்கள் நியமனம் செய்கிறார்கள். என்று ஒரு விழாவில் பேசிய கருத்துக்கு, நான் அன்றைக்கு மறுப்பு தெரிவித்து  விளக்கம் அளித்துள்ளேன்.

அப்படி இருக்கின்ற பொழுது மீண்டும் இன்றைக்கு பஞ்சாபில் ஆளுநராக இருக்கின்ற காலகட்டத்தில் அங்கு ஒரு விழாவில் பேசும்பொழுது, அதை வலியுறுத்தி பேசி இருக்கின்றார். ஆகவே துணைவேந்தர் நியமனம் என்பது இன்றைக்கு ஒரு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமனத்திற்கு அறிவிப்பு வெளிவந்தவுடன்,

அதில் கலந்து கொள்ள இருக்கின்றவர்கள் அத்தனை பேருமே விண்ணப்பிக்கின்றார்கள். அந்த விண்ணப்பத்தை யார் ஸ்கூட்னிங்செய்கிறார்கள் என்று பார்க்கின்ற பொழுது, கவர்னர் ஒருவரை நியமனம் செய்கிறார். சிண்டிகேட் உறுப்பினர் களெல்லாம் சேர்ந்து இன்னொருவரை நியமனம் செய்கிறார்கள். அரசு ஒருவரை நியமனம் செய்கிறது.

இந்த மூவரையும் சேர்த்து தேடுதல் கமிட்டி என்று சொல்கிறோம்., அந்த சர்ச் கமிட்டியில் மூவரும் சேர்ந்து, உதாரணமாக இப்பொழுது ஒரு பல்கலைக்கழகத்திற்கு 150 விண்ணப்பங்கள் வருகிறது என்றால், அந்த 150 விண்ணப்பங்களிலும் தகுதி படைத்தவர்களை வரிசைப்படுத்தி 10 பேரை தேர்வு செய்கிறார்கள்.

அந்த 10 பேரை தேர்வு செய்கின்ற அந்த கமிட்டி மேதகு ஆளுநர் அவர்கள் நியமனம் செய்கிற ஒருவர். ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது வேறு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றியவர் ஒருவரை நியமனம் செய்கிறார்கள். அதேபோன்று,சிண்டிகேட் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒருவரை நியமனம் செய்கிறார்கள்.

அதேபோல அரசு மூலமாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஒருவரை நியமனம் செய்கிறார்கள்.ஆகவே இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து அந்த 150 விண்ணப்பத்தில் இருந்து தகுதி படைத்தவர்களை 10 பேர்களை தேர்வு செய்கிறார்கள். 

அந்த பத்து பேர்களை தேர்வு செய்து, அவர்கள் மூவரும் கையொப்பமிட்டு அதனை பரிந்துரை செய்து கவர்னருக்கு அனுப்பி விடுகிறார்கள். கவர்னர்,அதை பரிசீலனை செய்து, அந்த 10 பேரிலே தகுதி படைத்த மூன்று பேரை தேர்வு செய்கிறார்கள்.அந்த மூன்று பேரையும் வரச் சொல்லி கவர்னர் தலைமையில் நேர்காணல் நடக்கின்றது.

அந்த நேர்காணலில் அரசு சம்பந்தப்பட்டவர்கள் யாரும் கலந்து கொள்வதில்லை. உயர் கல்வித்துறை அமைச்சரும் கலந்து கொள்வதில்லை. கவர்னர் மட்டுமே, நேர்காணல் நடத்துகிறார். அந்த மூவரில் ஒருவரை கவர்னர் தேர்வு செய்து அவரை துணைவேந்தராக அறிவிக்கின்றார்.

துணைவேந்தர் அறிவிப்பில், அரசுக்கோ அன்று  முதலமைச்சராக பணியாற்றிய எடப்பாடியாருக்கோ, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த எனக்கோ எந்த விதத்திலும் சம்பந்தமில்லை. அப்படி இருக்கின்ற பொழுது, தமிழகத்தில் நான்(புரோகித்) பணியாற்றிய காலத்தில் 40 கோடி முதல் 50 கோடி பெற்றுக்கொண்டு துணைவேந்தரை நியமனம் செய்கின்ற நிலை இருந்தது என்று பஞ்சாப் ஆளுநராக இருக்கக்கூடிய முன்னாள் தமிழகத்தில் ஆளுநராக இருந்த பண்வாரிலால் புரோகித் குறிப்பிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அல்ல.

ஆகவே, இன்று பஞ்சாபிலே அவருக்கு வந்து துணைவேந்தரை நியமனம் செய்யக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதை கருத்தில் கொண்டு, அதிலே இன்றைக்கு தமிழகத்தை குறை கூறுவது என்பது எந்த விதத்திலும் ஏற்புடையதாக இல்லை. அப்படி அந்த மூவரில், ஒருவரை நியமனம் செய்யும் பொழுது அவர்தான் துணைவேந்தராக பணியாற்றக் கூடிய சூழல் தமிழகத்தில் இருந்தது. 

அந்த மூவரில் எந்த சம்பந்தமே இல்லாத அரசு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆகவே,” துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க கவர்னரைச் சார்ந்தது, அதில், எந்தவித தவறு நடந்தாலும் அதற்கு முழு பொறுப்பு அன்றைக்கு கவர்னராக இருந்த பண்வாரிலால் புரோகித்தையே சாருமே”

தவிர, அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி யார் அவர்களையோ, அன்று ஆளுகின்ற அரசுக்கோ, அதேநேரத்தில் உயர் கல்வி துறை அமைச்சராக இருந்த எனக்கோ,
எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இன்றைக்கு தொலைக்காட்சிகளில் திரித்து, எடப்பாடி யார் மீதும், அன்று ஆட்சி செய்த அரசு மீதும், உயர்கல்வித்துறை அமைச்சர் மீதும் போடுகின்ற பழி, அவ்வாறு இல்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த பேட்டியின் போது பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, தருமபுரி நகர கழக செயலாளர் பூக்கடை ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.