வரும் 27 ஆம் தேதி காளையார்கோவிலில் நடக்கும் குருபூஜை தினத்தை முன்னிட்டும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் மருது சகோதரர்களின் (மருது பாண்டியர்) பங்கு மிக முக்கியத்து.
1785 ஆம் ஆண்டு முதல் 1801 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் ஆங்கிலேயரைத் விரட்ட இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடிவர்கள் பெரிய மருது, சின்ன மருது.
மேலும், ஆங்கிலேயருக்கு எதிராக ஆங்காங்கே தனித்தனியாக போராடிய குழுக்களை ஒன்றிணைத்து பெரும் போருக்கு தயாராகியபோது, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 ஆம் தேதி மருது சகோதரர்கள் திருப்பத்தூரில் வைத்து தூக்கிலிடப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியில் இவர்களுக்கு நினைவாலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 27ல் காளையார்கோவிலில் நடக்கும் குருபூஜை தினம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காளையார்கோவிலில் நடக்கும் குருபூஜை தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 9 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்து, காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.