தீபாவளிக்கு மழை எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 24ஆம் தேதி காலை புயலாக வலுபெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “நேற்று அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று காலை அக்டோபர் 22ஆம் தேதி 8.30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், போர்ட் பிளேர்க்கு, மேற்கு- வடமேற்கு திசையில் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், சாகர் தீவுக்கு தெற்கு- தென்கிழக்கு திசையில் 1460 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 23ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

பின்னர் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 24ஆம் தேதி காலை புயலாக வலுபெறக்கூடும். அதன் பின்னர் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கும்.

22.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

24.10.2022 மற்றும் 25.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

உசிலம்பட்டி (மதுரை), சாத்தூர் (விருதுநகர்), சத்தியமங்கலம் (ஈரோடு) தலா 6, குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), விரகனூர் அணை (மதுரை) தலா 4, வேப்பூர் (கடலூர்), அருப்புக்கோட்டை (விருதுநகர்), வைப்பார் (தூத்துக்குடி), திருச்செங்கோடு (நாமக்கல்), மதுரை விமான நிலையம் (மதுரை), கோவிலங்குளம் (விருதுநகர்), ஆண்டிபட்டி (மதுரை), கீழச்செருவை (கடலூர்), மேமாத்தூர் (கடலூர்) தலா 3, பாரூர் (கிருஷ்ணகிரி), கயத்தாறு (தூத்துக்குடி), செட்டிகுளம் (பெரம்பலூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), கோத்தகிரி (நீலகிரி), செய்யார் (திருவண்ணாமலை), சோலையார் (கோயம்புத்தூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), பெரம்பலூர், தென்பரநாடு (திருச்சி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), ஓமலூர் (சேலம்), மேட்டூர் (சேலம்), பெரியகுளம் (தேனி), ஓசூர் (கிருஷ்ணகிரி), கெட்டி (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி) தலா 2,

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.