வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தலைநகர் புதுடில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தலைநகர் புதுடில்லியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுடில்லி மாநகர போலீஸ் சிறப்பு கமிஷனர் சாகர் பிரீத் ஹூடா கூறியதாவது:
மாநகரம் முழுதும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. துணை கமிஷனர்கள் தலைமையில் போலீஸ் படையினர் மாநகர் முழுதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வணிக வளாகங்கள், மார்க்கெட், தியேட்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் நிலையம், மெட்ரோ நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் மக்கள் கொண்டாட வேண்டும்.
பட்டாசு விற்பது, வாங்குவது மற்றும் வெடிப்பது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement