தீயசக்தியை விரட்ட பில்லி, சூனியம்! மருமகளை ஆடையின்றி நிற்க கட்டாயப்படுத்திய மாமியார்.. கேரளாவில் அதிர்ச்சி


கேரளாவில் சூனியம், மாந்திரீகம் செய்வதற்காக மருமகள் உடைகளை களைய சொன்ன மாமியார் கைது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொடிய சம்பவத்தில் தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை.

கேரளாவில் சூனியம், மாந்திரீகம் செய்வதற்காக இளம்பெண்ணை ஆடைகளை களைய செய்து நிர்வாணமாக நிற்க வைக்க கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் மாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிலையில் தற்போது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொல்லத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சத்யபாபு (36) என்பவருக்கும் கடந்த 2017ல் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த 2 மாதத்தில் அவர்கள் வீட்டிற்கு மந்திரவாதிகள் வந்திருக்கின்றனர்.
வீட்டில் தீய சக்தி இருப்பதாக கூறி சூனியம், மாந்திரீகம் செய்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக இளம்பெண்ணின் கணவர் சத்யபாபு மற்றும் மாமியார் லைஷா (60) ஆகியோர் அவரின் உடைகளை களைந்து நிர்வாணமாக நிற்குமாறு கட்டாயப்படுத்தினர்.

தீயசக்தியை விரட்ட பில்லி, சூனியம்! மருமகளை ஆடையின்றி நிற்க கட்டாயப்படுத்திய மாமியார்.. கேரளாவில் அதிர்ச்சி | Mother In Law Arrested Daughter In Law Kerala

onmanorama

இதன்பின்னர் அப்பெண் கணவருடன் சண்டை போட்டு கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார்.
இது குறித்து அப்போதே பொலிசில் புகார் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது பொலிசார் வழக்குப்பதிவு செய்து லைஷாவை கைது செய்துள்ளனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சத்யபாபு, அவரின் சகோதரி ஸ்ருதி, மந்திரவாதி அப்துல் ஜப்பர் ஆகியோரை தேடி வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.